தருமபுரி மாவட்டம் கடத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளில் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான அலுவலர்கள் கடத்தூர், தருமபுரி மெயின் ரோடு, திண்டலானூர், கடைவீதி, வீரகானூர், புட்டிரெட்டிப்பட்டி சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தீயணைப்பு வாகனம் மூலம் கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளித்தனர்.
தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு - தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி அடிப்பு
தருமபுரி: கடத்தூர் டவுன் பஞ்சாயத்தில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி அடிப்பு
இந்நிகழ்வில் செயல் அலுவலர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருண்மொழி தேவன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சல்குமார், தீயணைப்பு அலுவலர் செல்வமணி, பேரூராட்சி பணியாளர் செந்தில் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Last Updated : Mar 28, 2020, 12:51 PM IST