தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையொட்டி, அங்குள்ள தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்றது. இதனை கனிமொழி எம்.பி., சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
தெருக்களில் கிருமி நாசினி தெளித்த கனிமொழி எம்.பி.,! - கனிமொழி எம் பி
தூத்துக்குடி: தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கிருமி நாசினி தெளித்த எம்.பி. கனிமொழி
தூத்துக்குடி போல்பேட்டை பகுதியிலுள்ள தெருக்களில் இரண்டு வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இந்தப்பணி மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முழு ஊரடங்கு: தருமபுரியில் கிருமி நாசினி தொளிக்கும் பணி தீவிரம்!