தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேவுள்ள ஆதிச்சநல்லூர், சிவகளையில் கடந்த மே மாதம் 25ஆம் தேதி மாநில தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் தொடங்கின. இந்த பணியில் 20 தொல்லியல் அலுவலர்கள், ஆய்வு மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஆதிச்சநல்லூரில் 72 குழிகளும், சிவகளையில் 70 குழிகளும் அமைக்கப்பட்டு அகழாய்வு பணி நடந்து வருகிறது. சிவகளையில் 31 முதுமக்கள் தாழிகளும், ஆதிச்சநல்லூரில் 24 முதுமக்கள் தாழிகளும், பிராமி எழுத்துக்களும், இரும்பு பொருள்களும், கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த இரு இடங்களிலும் நடைபெற்று வரும் அகழாய்வு பணியை தமிழ்நாடு தொல்லியல் துறை இயக்குநர் உதயசந்திரன் இன்று (செப்.11) நேரில் பார்வையிட்டார். அப்போது கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள், அகழாய்வு பணி, எழும்புக்கூடு ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.
சிவகளை, ஆதிச்சநல்லூர் அகழாய்வு களங்களில் தொல்லியல் துறை இயக்குநர் ஆய்வு இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம், புதுச்சேரி வரலாற்றுத்துறை பேராசிரியர் ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க:மதுரையில் ரூ.52 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல்!