தூத்துக்குடி:வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயக்குமாரை இன்று (மார்ச்.12) காலை தட்டப்பாறை அருகே காட்டுப்பகுதியில் போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது ஜெயக்குமார், காவல் துறையினரைத் தாக்கிவிட்டுத் தப்பியோட முயன்றார். இதில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குற்றவாளி ஜெயக்குமார் காலில் காயம்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும், காயம் அடைந்த உதவி ஆய்வாளர் ராஜ பிரபு மற்றும் காவலர் சுடலை மணி ஆகியோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், காவலர்களுக்கு ஆறுதல் கூற நெல்லை சரக டிஐஜி பிரவேஷ் குமார் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வருகை தந்தார். அரசு மருத்துவமனையில் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வரும் உதவி ஆய்வாளர் ராஜ பிரபு, காவலர் சுடலை மணி ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும், சம்பவம் தொடர்பாக நெல்லை சரக டிஐஜி விபரங்களை கேட்டறிந்தார். பின்பு, கொலை குற்றவாளி ஜெயபிரகாஷ் காலில் பட்ட குண்டு விபரங்களை அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணியிடம் கேட்டறிந்தார்.