தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருடு போன 10 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு - Thoothukudi district sp about stolen cell phones

தூத்துக்குடி மாவட்டத்தில் திருட்டுப் போன 10 லட்சம் மதிப்பிலான 100 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் டிஐஜி பிரவீன் குமார் அபிநபு வழங்கினார்.

திருட்டுப் போன 10 லட்சம் மதிப்பிலான 100 செல்போன்
திருட்டுப் போன 10 லட்சம் மதிப்பிலான 100 செல்போன்

By

Published : Dec 10, 2021, 8:04 AM IST

தூத்துக்குடிமாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பல செல்போன் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருந்தன. இதையடுத்து, திருட்டுப்போன செல்போன்களை உடனடியாக மீட்க சைபர்கிரைம் காவல்துறைக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

இதையடுத்து, சைபர் கிரைம் காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதில், சுமார் 10 லட்சம் மதிப்பிலான 100 செல்போன்கள் மீட்கப்பட்டன.

மேலும், மீட்கப்பட்ட செல்போனை உரியவரிடம் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நேற்று (டிச.9) நடைபெற்றது. இதில் சுமார் 10 லட்சம் மதிப்பிலான 100 செல்போன்களை டிஐஜி பிரவீன் குமார் அபிநபு உரியவர்களிடம் வழங்கினார்.

திருட்டு போன செல்போன்களை உரியவரிடம் டிஐஜி வழங்கினார்

இதைத்தொடர்ந்து எஸ்பி ஜெயக்குமார் செய்தியாளரிடம் பேசும்போது, "தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 453 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவரிடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் மக்கள் மிக ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

10 லட்சம் மதிப்பிலான 100 செல்போன்கள்

மேலும், போதைப் பொருள் கடத்தியதாக 19 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர். குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை குறித்து கடும் நடவடிக்கை எடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

திருட்டுப் போன செல்போன்களை உரியவரிடம் டிஐஜி வழங்கினார்

இதனிடையே, திருச்செந்தூர் கோயிலில் பக்தரிடம் 36 பவுன் நகை மற்றும் 40 ஆயிரத்தை பணம் கொள்ளை அடித்த கும்பலை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: HELICOPTER CRASH : 'பைலட் வருண் சிங்கை குணமடைந்தவுடன் நேரில் சென்று பார்க்கணும்' - மீட்டவர் உருக்கம்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details