தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்செந்தூர் கோயிலில் 165 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் அனுமதி!

தூத்துக்குடி: கரோனா ஊரடங்கில் கொண்டுவரப்பட்ட தளர்வு காரணமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 165 நாள்களுக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர்.

devotees-allowed-at-thiruchendur-temple-after-165-days
devotees-allowed-at-thiruchendur-temple-after-165-days

By

Published : Sep 1, 2020, 2:38 PM IST

அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கரோனா தடுப்பு நடவடிக்கை ஊரடங்கால், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் கோவிலில் பூஜைகள் வழக்கம்போல் நடந்தன.

இந்த நிலையில் இந்த மாதம் ஊரடங்கில் கொண்டுவரப்பட்ட சில தளர்வுகள்கள் காரணமாக அனைத்து கோயில்களிலும் பக்தர்களுக்கு, தரிசனத்திற்கான அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இன்று (செப்.1) முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிப்பட்டார்கள்.

அதன்படி, தினமும் 2 ஆயிரம் பேர் இலவச தரிசனம், ரூ.100 கட்டண தரிசனத்தில் காலை 5.30 முதல் இரவு 7.30 வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அர்ச்சனை, அபிஷேகம் செய்தல், பூஜை பொருட்கள் கொண்டுவர அனுமதி வழங்கப்படவில்லை.

மேலும் கடற்கரையில், நாழிகிணறு, முடிக்காணிக்கை செலுத்துதல், காதுகுத்துதல் போன்ற வேண்டுதல்களுக்கு அனுமதியில்லை.

சுய பாதுகாப்பு கருதி கர்ப்பிணிகள்,10 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் தரிசனத்திற்கு வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் முகக்கவசம் அணிந்து வரும் பக்தர்கள் மட்டும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அதிகாலை 5.30 மணிக்கு கோவிலில் உள்ள இரண்டு வாசல்களிலும் பக்தர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, 50 பேர் வீதம் இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் தரிசனத்திற்கு செல்பவர்கள் கோவிலுக்கு உள்ளே 6 அடி தகுந்த இடைவெளியை பின்பற்றும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:ஊரடங்கு தளர்வு: தமிழ்நாட்டில் இன்று முதல் பேருந்துகள் இயக்கம்!

ABOUT THE AUTHOR

...view details