பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 112ஆவது பிறந்ததினம் இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் மூன்றாவது மைலில் அமைந்துள்ள அவரது சிலைக்கு, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, முன்னாள் அமைச்சர் சி.த. செல்லபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தேவர் சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ! - pasumpon muthuramalinga thevar
தூத்துக்குடி: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 112ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அவரின் சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Devar birthday celebration in Thoothukudi
தேவர் சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ
திமுக சார்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினருமான கீதாஜீவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் என்பி.ஜெகன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் கமிட்டி சார்பில் கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார், தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் முரளிதரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அமைப்புச் செயலாளர் ஹென்றி தாமஸ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.