தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவில்பட்டியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்: களப்பணியில் அலுவலர்கள்! - dengu awareness

தூத்துக்குடி: கோவில்பட்டி நகராட்சி சார்பில் வள்ளுவர் நகர், வீரவாஞ்சி நகர் பகுதிகளில் டெங்கு களப்பணிகள் ஆய்வு நடைபெற்றது.

dengu

By

Published : Nov 9, 2019, 7:15 AM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் 36ஆவது வார்டு பகுதியிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அனைத்து வார்டு பகுதிகளிலும் மகளிர் குழுவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 85 களப்பணியாளர்கள், வீடு வீடாகச் சென்று வீட்டைச் சுற்றிலும், மொட்டை மாடியிலும் மழைநீர் தேங்கி டெங்கு காய்ச்சல் பரப்புகின்ற ஏடிஸ் வகை கொசுப்புழுக்கள் உற்பத்தியாக வாய்ப்புள்ள பிளாஸ்டிக் காலி டப்பாக்கள், பாட்டில்கள், டயர்கள் முதலிய பயன்பாட்டில் இல்லாத பொருட்களை அகற்றினர்.

டெங்கு ஒழிப்பில் அலுவலர்கள்

அதேபோல், தண்ணீர் தேக்கி வைத்துள்ள பேரல்கள், சிமெண்ட் தொட்டிகள், குடிநீர் இணைப்புத் தொட்டிகள், கீழ்நிலை நீர் தேக்கத் தொட்டிகள் மற்றும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளை ஆய்வு செய்து கொசுப்புழு ஒழிப்பு பணிகளை செய்து வருகிறார்கள்.

இன்று நகராட்சி வார்டு எண்.26, 27க்கு உட்பட்ட வீரவாஞ்சிநகர் பகுதிகளிலும், வார்டு 9,10க்குட்பட்ட வள்ளுவர் நகர் பகுதிகளிலும், நடைபெற்றுக் கொண்டிருந்த ஒட்டுமொத்த கொசுப்புழு ஒழிப்பு பணிகளை பொது சுகாதாரத் துறை மாவட்ட பயிற்சி மைய மருத்துவ அலுவலர் வர்த்தீஸ்வரி, புள்ளியியல் அலுவலர் அமுதா ஆகியோர் ஆய்வு செய்தார்கள். ஆய்வின்போது நகர்நல மைய மருத்துவர் அப்துல், நகராட்சி சுகாதார அலுவலர் இளங்கோ மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து!

ABOUT THE AUTHOR

...view details