தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்து முன்னணி சார்பில் திமுக எம்.பி.ராசாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் - DMK

தூத்துக்குடியில் இந்து முன்னணி சார்பில் திமுக எம்.பி. ஆ.ராசாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்து முன்னணி சார்பில் திமுக எம்.பி.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
இந்து முன்னணி சார்பில் திமுக எம்.பி.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

By

Published : Sep 18, 2022, 6:37 PM IST

தூத்துக்குடி: இந்து முன்னணி சார்பில் திமுக எம்.பி.ராசாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டூவிபுரம் 5ஆவது தெரு அண்ணா நகர் முகப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் இசக்கி முத்துகுமார் தலைமை வகித்தார்.

மாநகர் மாவட்ட பொதுச்செயலாளர் நாராயண ராஜ் முன்னிலை வகித்தார். மாநகர் மாவட்டச் செயலாளர்கள் ராகவேந்திரா, சிவலிங்கம், சரவணக்குமார், செயற்குழு உறுப்பினர் பலவேசம் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நெல்லை கோட்ட இந்து முன்னணி பொறுப்பாளர் ஆறுமுகச்சாமி கண்டன உரையாற்றி பேசினார். ஆர்ப்பாட்டத்தின்போது இந்துக்களை அவதூறாகப் பேசிய திமுக எம்.பி. ராசாவை உடனடியாக கைது செய்ய வேண்டும்; அவர் தனது எம்.பி. பதவியை உடனே ராஜினாமா செய்ய வேண்டும்;

நாடாளுமன்ற உறுப்பினர் பதவிப்பிரமாணத்தின்போது எடுத்த உறுதிமொழிகளை மீறி பேசிய ராசாவின் எம்.பி. பதவி பறிக்கப்பட வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர்.

இந்து முன்னணி சார்பில் திமுக எம்.பி.ராசாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

இதையும் படிங்க: வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாகக்கூறி ரூ.6 லட்சம் மோசடி - பாதிக்கப்பட்ட பெண் புகார்

ABOUT THE AUTHOR

...view details