தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தடுப்பு வேலியில் மோதி உயிரிழந்த புள்ளி மான்! - deer died

தூத்துக்குடி: பண்டாரம்பட்டி கிராம குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த புள்ளி மான் அங்கிருந்த தடுப்பு வேலியில் மோதி உயிரிழந்தது.

தூத்துக்குடி மாவட்டச் செய்திகள்  பண்டாரம்பட்டி  புள்ளிமான் உயிரிழப்பு  deer died  thoothukudi pandarampatti
தடுப்பு வேலியில் மோதி உயிரிழந்த புள்ளிமான்

By

Published : May 6, 2020, 1:06 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் வல்லநாடு, பசுவந்தனை, ஒட்டப்பிடாரம் காட்டுப் பகுதிகளில் புள்ளி மான்கள் உள்ளன. கரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கினால் போக்குவரத்து இல்லாததால் காட்டுப்பகுதிகளில் இருக்கக்கூடிய புள்ளி மான்கள் இடம்பெயர்ந்து ஊருக்குள் வருகின்றன.

கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பாக தூத்துக்குடி நகரப்பகுதியில் ஒரு புள்ளி மான் வந்து அங்குள்ள சுவற்றில் மோதி பலியானது. இந்நிலையில், பண்டாரம்பட்டி கிராமத்தின் குடியிருப்பு பகுதிகளில் இன்று மான் ஒன்று புகந்துள்ளது. மனிதர்களைக் கண்டதும் அங்குமிங்கும் ஓடிய புள்ளி மான் தடுப்பு வேலியில் பலமாக மோதி உயிரிழந்தது.

புள்ளிமான் உயிரிழந்தது குறித்து அப்பகுதி மக்கள் வருவாய துறை மற்றும் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த அலுவலர்கள் மானின் உடலை உடற்கூறாய்வு செய்வதற்காக எடுத்துச் சென்றுள்ளார். குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த புள்ளி மான் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:இருசக்கர வாகனங்களை துரத்தும் யானைகள்!

ABOUT THE AUTHOR

...view details