தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை காவல் துறையினர் தாக்கியதில் அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய இரண்டு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உள்பட 10 பேர் சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
சிபிசிஐடி ஐஜி சங்கர் முன்னிலையில் ஆஜரான அவர்கள் ஜூலை 19ஆம் தேதியன்று நடந்த சம்பவம் தொடர்பாக பல முக்கியத் தகவல்களை சாட்சியாக அளித்ததாக தெரிகிறது.
காவலர்கள் பத்து பேரிடம் சிபிசிஐடி விசாரணை குறிப்பாக இந்த விசாரணையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர் பியூலா ஆகியோர் ஆஜராகி சாட்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சாத்தான்குளம் கொலை வழக்கு: பென்னிக்ஸின் நண்பர்களிடம் சிபிசிஐடி விசாரணை