தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த முடுக்கலாங்குளம் தெற்கே உள்ள செவல்குளம் ஊரணியில் ஆண் உடல் ஒன்று மிதப்பதாக கொப்பம்பட்டி காவலர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதற்கு பின்பு நடத்திய விசாரணையில், ஊரணியில் இறந்தநிலையில் மிதந்தவர் முடுக்கலாங்குளம் தெற்குத் தெருவைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் அரிச்சந்திரன்(30) என்பது தெரியவந்தது. மதுவுக்கு அடிமையான இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் கடந்த மூன்று வருடங்களாக தனியாக வசித்து வந்துள்ளார்.