தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தல் - தீவிர பரப்புரையில் துரை வைகோ - தூத்துக்குடி

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து குருவிகுளம் ஒன்றியத்தில் துரை வைகோ பரப்புரையில் ஈடுபட்டார்.

daurai vaiko local body election campaign
daurai vaiko local body election campaign

By

Published : Oct 1, 2021, 10:07 AM IST

தூத்துக்குடி: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து குருவிகுளம் ஒன்றியத்தில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ பரப்புரை மேற்கொண்டார்.

தமிழ்நாட்டில், புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் 6, 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது. இதையொட்டி வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குருவிகுளம் ஒன்றியத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மகன் துரை வைகோ பரப்புரை செய்தார்.

மேலும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சித்தரம்பட்டி, பழைய அப்பனேரி, புது அப்பனேரி, அய்யனேரி, புளியங்குளம், லட்சுமியம்மாள்புரம், இளையரசனேந்தல், நக்கலமுத்தன்பட்டி, முக்கூட்டுமலை ஆகிய பகுதிகளிலும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பரப்புரை மேற்கொண்டார்.

இதையும் படிங்க:முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 4 முதல் நேரடி வகுப்பு

ABOUT THE AUTHOR

...view details