தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் கரோனா விழிப்புணர்வு வாரம்: 3 கிமீ தூரம் சைக்கிள் பேரணி - corona awareness week

தமிழ்நாடு அரசின் உத்தரவைத் தொடர்ந்து தூத்துக்குடியில் கரோனா விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. அதன்படி, மாநகராட்சியில் பொதுமக்களுக்கு கரோனா நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று (ஆகஸ்ட் 5) சைக்கிள் பேரணி நடைபெற்றது.

தூத்துக்குடியில் கரோனா விழிப்புணர்வு வாரம்
தூத்துக்குடியில் கரோனா விழிப்புணர்வு வாரம்

By

Published : Aug 5, 2021, 11:54 AM IST

Updated : Aug 5, 2021, 5:15 PM IST

தூத்துக்குடி:இந்தப் பேரணியை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், வருவாய் அலுவலர் கண்ணபிரான், உதவி ஆட்சியர்கள், மாநகராட்சி அலுவலர்கள் எனப் பலர் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி மாநகராட்சியிலிருந்து தொடங்கி முத்துநகர் கடற்கரை வரை சுமார் மூன்று கிமீ தூரம் வரை பேரணி நடந்தது. கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை உணர்த்தும் வகையில் மெய்சித்திர விளக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

மக்களை தேடி மருத்துவம்

முன்னதாக அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "கரோனா தொற்று மூன்றாவது அலை தூத்துக்குடி மாவட்டத்தில் பரவாமல் தடுக்க மக்கள் முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும். இருப்பினும் இதனை எதிர்கொள்ள தேவையான ஆக்சிஜன், படுக்கை வசதிகள், தடையில்லா ஆக்சிஜன் வழங்குவது, கூடுதல் படுக்கைகள் என அனைத்து மருத்துவ வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடியில் கரோனா விழிப்புணர்வு வாரம்

'மக்களை தேடி மருத்துவம்' திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் கீழமுடிமன் கிராமத்தில் இன்று தொடங்கிவைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் நோய்வாய்ப்பட்டு நேரடியாக மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைப் பெற முடியாதவர்களின் உடல்நலனைப் பாதுகாக்க அவர்களது வீடுகளுக்கே சென்று உடல் பரிசோதனை செய்தல், மருந்துப் பொருள்கள் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.

இதையும் படிங்க:தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Last Updated : Aug 5, 2021, 5:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details