தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Bitcoin Scam: ஃபேஸ்புக்கில் பிட்காய்னுக்கு ரூ.12 லட்சம் விளம்பர மோசடி..அதிரடி காட்டிய சைபர் குற்றப்பிரிவு - பேஸ்புக்கில் பிட்காய்னுக்கு

Bitcoin Scam: பிட்காயின் இன்வெஸ்ட்மென்ட் என முகநூலில் விளம்பரம் செய்து ரூ.12 லட்சம் மோசடி செய்தவரை தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 5, 2023, 5:58 PM IST

தூத்துக்குடி: முகநூல் பக்கத்தில் பிட்காயின் இன்வெஸ்ட்மென்ட் என்ற விளம்பரத்தின் மூலம் ரூ.12 லட்சம் மோசடி செய்த நபரை கோவைக்கு சென்று அலேக்காக தூக்கிய தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வாவல்தோத்தி பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் ராமர் (48). இவருக்கு முகநூல் கணக்கில் பிட்காயின் இன்வெஸ்ட்மென்ட் (Bitcoin Investment) சம்பந்தமாக விளம்பரம் ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து ராமர் அதிலிருந்த லிங்கை கிளிக் செய்து அதில் குறிப்பிட்டுள்ள WhatsApp எண்ணில் தொடர்பு கொண்டுள்ளார். பின்னர் அவர்கள் கொடுத்த Protonforex.com என்ற இணையத்தில் ரூ.12,10,740 முதலீடு செய்துள்ளார்.

இதனையடுத்து, தான் மோசடி செய்யப்பட்டு ஏமாற்றப்பட்டதை அறிந்த ராமர் NCRP-ல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார். பின்னர், சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சுதாகர் உட்பட போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து மோசடி எதிரியை கண்டுபிடித்து கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில், மேற்படி தனிப்படை போலீசார் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டதில், மேற்படி ராமரை மோசடி செய்தது கோயம்புத்தூர் சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சாமிராஜ் மகன் கருணாகரன்(32) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து தனிப்படையினர் நேற்று கோயம்புத்தூர் விரைந்த போலீசார் கருணாகரனை அவரது வீட்டில் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் பணம், ஒரு ஸ்கோடா கார், ஆப்பிள் லேப்டாப் மற்றும் செல்போன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து தூத்துக்குடி அழைத்து வந்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 4-ல் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், அவரது வங்கி கணக்கிலிருந்த ரூ.9,98,865 பணத்தையும் முடக்கம் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில் தனிப்படை போலீசார் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை செய்து எதிரியை கண்டுபிடித்து கைது செய்ததற்கு தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் பாராட்டினர்.

எச்சரிக்கையுடன் இருங்கள் மக்களே!: நவீன உலகில் டிஜிட்டலை பயன்படுத்தி சமூக விரோதிகள் இவ்வாறு சைபர் மோசடியில் பணப்பறிப்பில் ஈடுபட்டு வருவதும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. சமூக வலைதளங்களில் பரவிக் கிடக்கும் இத்தகைய பொறிகளில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அதே நேரத்தில் அறிமுகம் இல்லாத வலைதளங்களிலிருந்து எந்த தகவலையும் நம்பிவிட வேண்டாம். அவை யாவும் தங்களுக்கு ஏமாற்றத்தையே பெரும்பாலும் அளிக்கும்.

சைபர் க்ரைம் புகார் அளிப்பது எப்படி?: ஏழைகளுக்கு உதவ வேண்டும் என புதிய எண்களிலிருந்து குறுஞ்செய்திகள் சமீப காலங்களாக அதிகமானோருக்கு தங்களின் மொபைலில் வந்த வண்ணம் உள்ளன. இதில், அநேக நேரத்தில் உள்நாட்டு எண்களாகவும் இருக்கும்; அதில் உள்ள லிங்க்-யை தொடவோ அல்லது அவர்கள் குறுஞ்செய்தியில் கூறியபடியோ எதையும் நாம் செய்யக்கூடாது என்பதை எப்போது நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒருவேளை நாம் ஏதோ ஒரு வகையில், இவைகளின் பாதிப்புகளால் பாதிக்கப்பட நேர்ந்தால், தேசிய சைபர் குற்றச்செயல்கள் தடுப்பு நடவடிக்கைக்கான இணையதளத்தில் National Cyber crime Reporting Portal - NCRP-ல் முறைப்படி நமது புகாரை பதிவு செய்யலாம். இதன் மூலம் சைபர் மோசடிகளினால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கலாம் என்பதை மறவாதீர்கள்.

இதையும் படிங்க: பள்ளி மாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்த விவகாரம்: தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம்!

ABOUT THE AUTHOR

...view details