தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாத்தான்குளம்: கோவில்பட்டி கிளைச் சிறையில் குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் விசாரணை - தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணை

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக கோவில்பட்டி கிளைச் சிறையில் குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் விசாரணை நடத்தினார்.

kovilpatti-sub-jail-in-thoothukudi
kovilpatti-sub-jail-in-thoothukudi

By

Published : Jul 9, 2020, 10:41 PM IST

தூத்துக்குடி சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ்(58), அவரது மகன் பென்னிக்ஸ்(31) ஜூன் 19ஆம் தேதி சாத்தான்குளம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், அவர்கள் இருவரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் பென்னிக்ஸ் ஜூன் 22ஆம் தேதி இரவும் ஜெயராஜ் ஜூன் 23ஆம் தேதி அதிகாலையும் உயிரிழந்தனர். அதுதொடர்பாக கொலை வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.

குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் விசாரணை

இந்த நிலையில், கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் இன்று(ஜூலை 9) மதியம் கோவில்பட்டி கிளைச் சிறைக்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.

அப்போது, அவர் தந்தை-மகன் அடைக்கப்பட்டிருந்த சிறையை பார்வையிட்டார், மேலும் ஆவணங்களை சரிபார்த்து சிறைத்துறை அலுவலர்களிடம் விசாரணை நடத்தினார். 20 நிமிடங்கள் விசாரணைக்குப் பின் அவர் சிறையைவிட்டு வெளியே வந்தார்.

இதையும் படிங்க:சாத்தான்குளம் சம்பவம்: சிகிச்சையில் இருக்கும் காவலர்களிடம் நீதிபதி விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details