தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என உறுதி - பாஜக மீது குற்றச்சாட்டு

தமிழகத்தில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயல்படும் என மத்திய குழு உறுப்பினர் வாசுகி தெரிவித்துள்ளார்.

ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என உறுதி
ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என உறுதி

By

Published : Jul 31, 2021, 10:37 PM IST

தூத்துக்குடி : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக்குழு உறுபப்பினர் வாசுகி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "நாடாளுமன்றம் தொடர்ந்து நடைபெறவும், மக்கள் பிரச்னைகள் குறித்து விவாதம் மேற்கொள்ளவும் மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும். பெகாசஸ் தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் என்பது மத்திய அரசின் எதேச்சதிகார போக்கை காட்டுகிறது. கருத்து சுதந்திரத்தின் குரலை நெரிக்க கூடியதாக உள்ளது".

பாஜக மீது குற்றச்சாட்டு

"பொய்யான வழக்குகளை ஜோடித்து சமூக செயற்பாட்டாளர்களை சிறையில் அடைப்பது போன்ற நடவடிக்கைகளின் ஒரு பகுதிதான் பெகாசஸ் தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரம். ஜனநாயக நாட்டில் மாற்றுக்கருத்துக்கள் வரும் விமர்சனங்கள் வரும். ஆனால் கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கப்பட்டு கூடாது. இதனை எதிர்க்கட்சிகள் தட்டிக் கேட்பது அவர்களுடைய அரசியல் கடமை. இதன்காரணமாக பாராளுமன்றத்தை முடங்குவது என்பது ஏற்புடையதல்ல. அதற்கு காரணம் பாரதிய ஜனதா கட்சி தான்".

ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம்

நூறு நாள் வேலை திட்டம்

"நூறு நாள் வேலைத் திட்டத்தில் மத்திய அரசு நிதியை குறைத்துக் கொண்டே மாநில அரசுகளுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. இந்தத் திட்டத்திற்கான நிதியை படிப்படியாக குறைத்து திட்டத்தை முடக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் எண்ணமாக உள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு கூலி 500 ரூபாயாக உயர்த்த வேண்டும்".

ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி

"தமிழகத்தில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயல்படும். மார்க்சிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் அரசின் திட்டங்களுக்கு மாற்றான கருத்துக்கள் இருந்தால் எடுத்துக் காட்டுவோம். தேர்தல் வாக்குறுதிகளை தமிழக அரசு படிப்படியாக நிறைவேற்ற வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு. பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குவது உள்ளிட்ட தேர்தல் அறிவிப்புக்களை நிறைவேற்ற வேண்டும். மாநில அரசின் நிதி சுமையை குறைக்க ஜிஎஸ்டி உள்ளிட்ட நிலுவை தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க : 'தமிழ்நாட்டில் தொழில்நுட்ப வளர்ச்சி பெற்றதற்கு முக்கியக் காரணம் கருணாநிதி'

ABOUT THE AUTHOR

...view details