தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 10, 2022, 4:36 PM IST

ETV Bharat / state

'சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்கான முயற்சிகளை கம்யூ. கட்சி எடுக்கும்'

கடம்பூர் பேரூராட்சியில் வாக்காளர்களும் வேட்பாளர்களும் சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதற்கான ஏற்பாட்டை கம்யூனிஸ்ட் கட்சி செய்யும் என சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் வாசுகி தெரிவித்துள்ளார்.

சி.பி.எம் மத்திய குழு உறுப்பினர் வாசுகி பேட்டி
சி.பி.எம் மத்திய குழு உறுப்பினர் வாசுகி பேட்டி

தூத்துக்குடி:மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கு நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி இன்று (பிப்ரவரி 10) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், "உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு சிறப்பான வெற்றி கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடம்பூர் பேரூராட்சிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருப்பது வெட்கக்கேடானது.

ஒருவரின் நிர்பந்தத்துக்கு அரசு அலுவலர்கள் இரையாகி தவறு செய்துள்ளனர். கடம்பூர் பேரூராட்சியில் ஒருவரின் அதிகாரம் மட்டும் ஆட்டம் போடுவதற்கு நிச்சயமாக விட மாட்டோம். கடம்பூர் பேரூராட்சியில் மறுதேர்தல் நடக்கும்போது, நிச்சயம் மாற்றம் வரும்.

சி.பி.எம் மத்திய குழு உறுப்பினர் வாசுகி பேட்டி

சுதந்திரக் காற்று

அங்குள்ள வாக்காளர்களும் வேட்பாளர்களும் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்கான ஏற்பாட்டை நிச்சயமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்யும். பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து மக்களுக்கு எதிரான திட்டங்களை நடைமுறைப்படுத்திவருகிறது. கடுமையான விலை உயர்வு, வேலையின்மை, மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கக்கூடிய மசோதாக்களை நிறைவேற்றுவது கவலை அளிக்கிறது.

வேலைத் திட்டம்

100 நாள் வேலைத் திட்டத்துக்கு சமீபத்தில் தாக்கல்செய்யப்பட்ட பட்ஜெட்டில் குறைவாக நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டிருக்கிறது. உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தலில் மத அடிப்படையில் மக்களைப் பிரிப்பதற்கான பரப்புரையை பாஜக தொடங்கியுள்ளது.

இஸ்லாமிய மக்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக சங்பரிவார் அமைப்பு எடுத்துவருகிறது. சங்பரிவார் அமைப்பு வன்முறையைத் தூண்டிவிடக் கூடாது. தமிழ்நாட்டில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக செய்ய முடியாத விஷயங்களை திமுக அரசு செய்துவருகிறது" என்றார்.

இதையும் படிங்க:கடலோர, டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details