தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘நிலக்கரி வழங்குவதில் சிக்கித் தவித்துவரும் ஒன்றிய அரசு’ - செய்தியாளர் சந்திப்பு

அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி வழங்குவதில் ஒன்றிய அரசு கையாலாகாத நிலையில் சிக்கித் தவித்துவருகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

press meet  cpim  cpim state secretary  cpim state secretary balakrishnan  cpim state secretary balakrishnan press meet  thoothukudi news  thoothukudi latest news  பாலகிருஷ்ணன்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்  செய்தியாளர் சந்திப்பு  பாலகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு
பாலகிருஷ்ணன்

By

Published : Oct 14, 2021, 11:43 AM IST

தூத்துக்குடி:இது குறித்து அவர், நேற்று (அக்டோபர் 13) தூத்துக்குடியில் செய்தியாளரைதச் சந்தித்துப் பேசினார். அப்போது, “ஆதிச்சநல்லூரில் 150 ஆண்டுகளாக தொல்லியல் ஆய்வு பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இதில் ஜெர்மனி, பிரிட்டன் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள்கூட அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு அங்கு கிடைக்கப்பெற்ற சுமார் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால அரிதான பொருள்களை அவர்களது நாட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

தொல்லியல் துறையைப் பலப்படுத்துக

இதனை ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து நமது நாட்டிலிருந்து எடுத்துச் சென்ற அரிய பொருள்களைத் திருப்பிக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் மிகவும் பலவீனமாக உள்ள தொல்லியல் துறையைப் பலப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் அதில் பயிலும் மாணவர்களுக்கு எல்லா துறைகளிலும் பணி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதிச்சநல்லூர், சிவகளை, கீழடி அகழாய்வு முடிவுகளை பள்ளி கல்லூரி மாணவர்களுக்குப் பாடமாகத் தர வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இருக்கின்றன. அதனைப் படியெடுத்து பாதுகாக்க வேண்டும். மைசூருவில் இருக்கக்கூடிய கல்வெட்டுகளை நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செய்தியாளரைச் சந்தித்த பாலகிருஷ்ணன்

மோசமான நடைமுறைக்கு கிடைத்த தோல்வி

நடைபெற்று முடிந்துள்ள ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் பாஜக, அதிமுகவின் மோசமான நடைமுறைக்கு கிடைத்த தோல்வி. கடந்த கால ஆட்சி மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியும், தற்போது நடைபெறும் ஆட்சியின் நிதான செயல்பாடும், பிரச்சினைகளை அணுகும் முறைகளும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியைத் தேடித் தந்துள்ளது.

இந்தியாவில் ஒன்றிய, மாநில அரசுகளுக்குச் சொந்தமாக உள்ள சுமார் 135 அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரியினை வழங்குவதில் ஒன்றிய அரசு கையாலாகாத நிலையில் சிக்கித் தவித்துவருகின்றது. இந்நிலை தொடர்ந்தால் பல அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தித் தட்டுப்பாடு ஏற்படக்கூடும்.

எனவே தனியார் அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி முன்னுரிமை கொடுத்து வழங்காமல், அரசுக்குச் சொந்தமான அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி தட்டுப்பாடு இல்லாமல் வழங்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுக ஆட்சியின் மீது குறை சொல்லாமல் இருந்தால் மட்டுமே ஆச்சரியப்பட வேண்டும். திமுக ஆட்சியின் மீது குறை சொல்லும் அவர், பாஜக ஆளும் மாநிலங்களில் நடைபெறும் குற்றங்களை பற்றி எதுவும் வாய் திறப்பதில்லை. இதுவே அவரது நியாய தர்மத்தை எடுத்து மக்களுக்கு காட்டிவிடும்” என்றார்.

இதையும் படிங்க: அலட்சியத்தால் அதிகரித்த உயிரிழப்பு: ஈரோடு காவல் துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!

ABOUT THE AUTHOR

...view details