தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆளுநர் மூலம் மாநில அரசை ஆட்டிப்படைப்பது ஏற்புடையது அல்ல - பாலகிருஷ்ணன் - thoothukudi district news

ஆளுநரை வைத்துக்கொண்டு ஒரு மாநில அரசை ஆட்டிப்படைப்பது, ஆளுவது என்பது ஏற்புடையது அல்ல என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

பாலகிருஷ்ணன்
பாலகிருஷ்ணன்

By

Published : Sep 11, 2021, 6:35 PM IST

தூத்துக்குடி: பாரதியாரின் 100ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் உள்ள பாரதியாரின் நினைவு இல்லத்திற்கு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பாரதியார் மணி மண்டபத்திற்கு சென்று பாரதியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "முதலமைச்சர் முக ஸ்டாலின் பாரதியாரை நினைவு கூறும் வகையில் பாரதியாரின் 100ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பல்வேறு அறிவிப்புகளை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.

பாரதியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ஆளுநர் என்பது ஒன்றிய அரசின் ஒரு கையால் ஆகத்தான் இருக்கிறார்கள். இதனால் தான் ஒரு மாநிலத்திற்கு ஆளுநர் தேவையா என்பதே கேள்வியாக இருக்கிறது.

ஒன்றிய அரசின் எடுபிடி ஆளுநர்

மாநில மக்களால் தேர்ந்தெடுக்கபடுகிற, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படுகிற திட்டங்கள் தான் நிறைவேற்றபட வேண்டுமே தவிர, ஆளுநர் என்ற ஒன்றிய அரசின் எடுபிடியை வைத்துக்கொண்டு ஒரு மாநில அரசை ஆட்டிப்படைப்பது, ஆளுவது என்பது ஏற்புடையது அல்ல ” என கூறினார்.

இதையும் படிங்க : ’எங்களுக்கு பேச எதையும் மிச்சம் வைக்காமல் திமுக அறிவிப்பு வெளியிடுகிறது’ - சீமான் கலகல பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details