ஏஐடியூசி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஏஐடியூசி அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லக்கண்ணு கலந்துகொண்டு ஏஐடியூசி கொடியை ஏற்றிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அழகு முத்து பாண்டியன், நகர செயலாளர் சரோஜா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நல்லக்கண்ணு, "இந்தியாவில் சமத்துவம், சகோதரத்துவம் மதச்சார்பின்மை இதை தடுத்து விடக்கூடாது. இதற்கு மாற்று வந்துவிடக்கூடாது.
இந்தியாவில் பல மொழி, சாதி, மதங்கள் இருக்கக்கூடியது, ஒன்றுக்கொன்று பாகமே இல்லாமல் சமத்துவம் இருக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டம் தற்போதைய காலகட்டத்தில் மறுக்கப்பட்டு விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
தமிழ்நாட்டில் மதசார்பற்ற கூட்டணி தொடர்கிறது, மதவெறி சக்தியான பாஜகவை முறியடிக்க வேண்டும் அதுதான் எங்களின் நோக்கம். கூட்டணிக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கீடு குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கப்படும். தமிழ்நாடு அரசு அரசின் கட்டமைப்புகளை பற்றி கவலைப்படவில்லை மத்திய அரசு, தமிழகத்தை கண்டுகொள்வதில்லை. ஆட்சியாளர்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவே உள்ளனர்.
தமிழ்நாடு அரசு சட்டத்தைப் பற்றியும் கவலைப்படுவதில்லை" என குற்றம்சாட்டினார்.
“மதவெறி சக்தியை விரட்டியடிப்போம்”- நல்லக்கண்ணு இதையும் படிங்க:75 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம்போன ஒரு கிலோ தேயிலைத் தூள்!