தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விளாத்திகுளத்தில் மாட்டுவண்டி பந்தயம்!

தூத்துக்குடி: விளாத்திகுளம் அருகே உள்ள கோவில்குமரெட்டிபுரம் பாலசுப்ரமணியசுவாமி மாசி திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. இதில் சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை மக்கள் இருபுறமும் நின்று உற்சாகத்துடன் கண்டுகழித்தனர்.

Cow racing at Vilathikulam
Cow racing at Vilathikulam

By

Published : Feb 27, 2021, 9:05 PM IST

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கோவில்குமரெட்டிபுரம் கிராமத்தில் உள்ள சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலசுப்பிரமணிய சாமி திருக்கோயிலின் மாசித்திருவிழா தற்போது நடைபெற்றுவருகிறது. விழாவின் ஒரு பகுதியாக இன்று (பிப்.27) மாட்டுவண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது.

சின்ன மாடு, பெரியமாடு என இருபிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 42 ஜோடி மாட்டுவண்டிகள் பங்கேற்றன. பெரிய மாட்டு வண்டிக்கு 14 கிலோமீட்டர் தூரமும், சின்ன மாட்டு வண்டிக்கு 12 கிலோ மீட்டர் தூரமும் என இரு பிரிவுகளாக இப்பந்தையம் நடைபெற்றது.

விளாத்திகுளத்தில் மாட்டுவண்டி எல்லை பந்தயம்

பெரிய மாட்டு வண்டி போட்டியில் மதுரை அவனியாபுரம் மாட்டுவண்டி முதலிடத்தை பெற்றது. சின்ன மாட்டு வண்டி போட்டியில் விளாத்திகுளம் பூதலாபுரம் மாட்டு வண்டி முதலிடத்தைப் பெற்றது. போட்டியில் வெற்றிபெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், மாடுகளை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இன்று விளாத்திகுளம் பகுதிகளில் அதிகஅளவில் பனிபொழிவு இருந்தது, பனிபொழிவையும் பொருட்படுத்தாமல் அப்பகுதி மக்கள் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை இருபுறமும் நின்று உற்சாகத்துடன் கண்டுரசித்தனர்.

இதையும் படிங்க: மதுரை டூ சென்னை: 50 நிமிடத்தில் பெண்ணிற்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை!

ABOUT THE AUTHOR

...view details