தமிழ்நாடு

tamil nadu

கோவில்பட்டியில் இன்று முதல் 5 நாட்களுக்கு முழு கடையடைப்பு!

By

Published : Jul 11, 2020, 6:58 AM IST

தூத்துக்குடி: கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கோவில்பட்டியில் இன்று முதல் 5 நாட்களுக்கு முழு கடையடைப்பு என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.

kovilpatti
kovilpatti

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இன்று(ஜூலை 11) முதல் ஐந்து நாட்களுக்கு முழு கடையடைப்பு அமல்படுத்தப்படும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டலத் தலைவர் எம்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தைச் சேர்ந்த 44 வியாபாரிகள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், கோவில்பட்டியில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என கணக்கெடுக்கப்படவில்லை. அந்த அளவுக்கு இங்கு பரவல் உள்ளது. தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு, கோவில்பட்டி நகரப் பகுதியில் உள்ள கடைகள், இன்று முதல் (ஜூலை 11) 15ஆம் தேதி வரை முழுமையாக அடைக்கப்படுகிறது.

இதில், அத்தியாவசியத் தேவைகளான பால், தண்ணீர், மருந்தகங்கள் ஆகிய கடைகளைத் தவிர, மற்ற கடைகள் மூடப்படும். பொதுமக்கள், வணிகர்களின் நலன் கருதியே இந்த முடிவெடுத்து இதனை செயல்படுத்துகிறோம்' என்றார்.

இதையும் படிங்க:விருதுநகர் மாவட்டத்தில் மாலை 3 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும்!

ABOUT THE AUTHOR

...view details