தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 30, 2020, 2:14 PM IST

ETV Bharat / state

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலுக்கு எதிர்ப்பு: காங்கிரஸார் தூக்கு மாட்டிக் கொண்டு போராட்டம்

தூத்துக்குடி: கோவில்பட்டியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினர் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை ரத்து செய்ய வலியுறுத்தி தூக்கு மாட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூக்கு மாட்டிக் கொண்டு போராட்டம்
தூக்கு மாட்டிக் கொண்டு போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் ராஜிவ் காந்தி புகைப்படத்துடன் வந்தனர். பின்னர் அவர்கள் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட துணைத் தலைவர் அய்யலுசாமி ( வழக்கறிஞர்) தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின்போது காங்கிரஸார், அங்குள்ள மரத்தில் கயிற்றினால் கழுத்தில் தூக்கு மாட்டிக் கொண்டு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

மேலும் போராட்டக்காரர்கள், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அனைவரையும் உடனடியாகத் தூக்கிலிட வேண்டும், பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை பொது வெளியில் தூக்கிலிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இதைத் தொடர்ந்து கோட்டாட்சியர் விஜயாவிடம் தங்களது கோரிக்கை மனுவை கொடுத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: இந்து மக்கள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சூர்யா ரசிகர்கள் மனு!

ABOUT THE AUTHOR

...view details