தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் 2018-19-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகை தராதவர்களுக்கு உடனடியாக வழங்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் தரையில் முட்டி போட்டும், தோப்பு கரணம் போட்டும் கோஷங்கள் எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர் அவர்கள் கோட்டாட்சியர் விஜயாவிடம் மனுவை வழங்கினார்கள்.
முட்டிபோட்டு நூதன போராட்டம் இதுகுறித்து அந்த மனுவில் கூறப்பட்டதாவது;
2018-19-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு உறுதி செய்யப்பட்டு சுமார் 60 சதவீத விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விவசாயிகளுக்கு கூட்டுப்பட்டா உள்ளிட்ட சில காரணங்களால் காப்பீட்டு தொகை வரவில்லை. இதுதொடர்பாக கடந்த மார்ச் மாதம் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு மனுக்கள் பெறப்பட்டன. ஆனால், அந்த மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் காப்பீட்டு நிறுவனங்கள் குறுகிய காலத்தில் காப்பீட்டு வர்த்தகத்தை முடிக்கப்போவதாக அறிந்தோம். எனவே, அலட்சியமாக செயல்படும் வேளாண்மைத் துறை உரிய நடவடிக்கை எடுத்து துரிதமாக விவசாயிகள் பயன்பெற ஆவண செய்ய வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: 1,000 வாலா போல வெடித்த டிரான்ஸ்ஃபார்மர்!