தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புறக்கணிக்கும் திமுக -   மனவருத்தத்தில் காங். நிர்வாகிகள்

தூத்துக்குடி: கூட்டணியில் உள்ள திமுகவிற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் நடத்திய ரகசிய ஆலோசனை கூட்டத்தால், தூத்துக்குடி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காங். நிர்வாகிகள் ரகசிய கூட்டம்

By

Published : Mar 30, 2019, 4:41 PM IST

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் அக்கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி போட்டியிடுகிறார். இந்நிலையில், கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம், காந்தி மண்டபத்தில் நடந்தது. கூட்டத்தில், வடக்கு மாவட்ட பொருளாளர் கேசவன், வடக்கு மாவட்ட துணைத்தலைவர்கள் திருப்பதி ராஜா, வழக்கறிஞர் அய்யலுசாமி, தகவல் அறியும் சட்ட பிரிவு மாவட்ட தலைவர் ராஜசேகரன், வடக்கு மாவட்ட முன்னாள் தலைவர் காமராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில், திமுக பரப்புரைக் கூட்டம் மற்றும் செயல் வீரர் கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியினரை அழைப்பதில்லை. தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினரை புறக்கணிக்கின்றனர். இது தொடர்பாக, மக்களவைத் தொகுதி பொறுப்பாளரான ஏ.பி.வி.சி. சண்முகத்திடம் எடுத்துக் கூறி தீர்வு காணுவது என்று முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில், "கனிமொழி பரப்புரை மேற்கொள்ளும் பகுதிகளுக்கு காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அழைப்பு இல்லை. வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர், வட்டார தலைவர்கள், நகர தலைவர்களுக்கு எவ்வித முறையான அழைப்பு கொடுக்கமால் அவமரியாதை செய்து வருகின்றனர். அதையும் மீறியும் தகவல் அறிந்து, காங்கிரஸ் கட்சியினர் கொடியுடன் சென்றால், அங்கு கொடியை கூட பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என்பதற்காக திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும். இந்த பிரச்னை குறித்து கனிமொழிக்கு காங்கிரஸ் பொறுப்பாளர்கள் வழியாக தகவல் தெரிவிக்க வேண்டும், இல்லை என்றால் தேர்தல் பணியாற்ற போவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். சிலர் காங்கிரஸ்க்கு தகவல் தெரிவிக்கமால் தங்கள் பகுதிகளுக்கு வந்தால் கனிமொழியை மறித்து போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றார்.

மேலும், இதுதொடர்பாக வழக்கறிஞர் அய்யலுசாமி கூறும்போது, "தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் எங்கள் கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி பங்கேற்ற, கோவில்பட்டி ஒன்றிய பகுதியில்நடந்த பரப்புரைக்கும், 2 நாட்கள் முன்பு கோவில்பட்டி தனியார் மண்டபத்தில் நடந்த கூட்டணிக் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்திற்கும் எங்களுக்கு அழைப்பு இல்லை. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுலின் உத்தரவுக்கிணங்க நாங்கள் திமுகவுக்கு வாக்களிப்போம். ஆனால் நாங்கள் வேலை செய்ய வேண்டுமா.. வேண்டாமா.. என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும், என்றார்.

திமுகவிற்கு எதிராக காங்கிரஸ் நிர்வாகிகள் நடத்தி ரகசிய ஆலோசனைக்கூட்டம் மற்றும் கூட்டத்தில் எடுக்கப்பட்டமுடிவுகள் பெரும் பரபரப்பினை தூத்துக்குடி அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details