தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பத்ம சேஷாத்ரி பள்ளி நிர்வாகிகளைக் கண்டித்து இ.கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம் - Bmp

தூத்துக்குடி: பத்ம சேஷாத்ரி பள்ளி நிர்வாகத்தையும், பாஜக மூத்த நிர்வாகி சுப்பிரமணியன் சுவாமியையும் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் கறுப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கறுப்பு கொடி கண்டன ஆர்ப்பாட்டம்
கறுப்பு கொடி கண்டன ஆர்ப்பாட்டம்

By

Published : Jun 1, 2021, 5:32 PM IST

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாவட்ட நிர்வாகக் குழு சார்பில், 'பத்ம சேஷாத்ரி பள்ளிமீது உள்நோக்கத்துடன் செயல்பட்டால் திமுக ஆட்சியைக் கலைத்துவிடுவேன்' எனக் கூறிய சுப்பிரமணியன் சுவாமியைக் கண்டித்தும், பத்ம சேஷாத்ரி பள்ளிகளின் நிர்வாகிகளைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கறுப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் மாடசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பத்ம சேஷாத்ரி பள்ளிகளின் நிர்வாகிகள், பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமியைக் கண்டித்து அவர்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் கோஷங்களை எழுப்பி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details