தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடும்பத்தோடு தீக்குளிக்க முயற்சி- ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு! - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கந்து வட்டி கொடுமையால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

குடும்பத்தோடு தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி- ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு!
குடும்பத்தோடு தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி- ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு!

By

Published : Oct 17, 2022, 4:51 PM IST

தூத்துக்குடி:மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் மக்கள் குறை தீர்க்கும் முகாம் கூட்டம் நடைபெரும். அதனடிப்படையில், இன்று(அக்.17) காலை மனு அளிப்பதற்காக மக்கள் வந்தனர்.

அப்போது மனு அளிப்பதற்காக வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அருகில் இருந்து சுதாரித்து கொண்ட போலீசார் உடனடியாக கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை பிடுங்கி அக்குடும்பத்தினர் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர்.

பின்னர் போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது; தூத்துக்குடி, ஏரல் அருகே உள்ள சூழ வாய்க்கால் கிராமத்தைச் சார்ந்தவர் மாரியப்பன் (40), ஜோதிடம் தொழில் செய்து வருகிறார். மனைவி பத்தினி இவரின் படிக்கும் மகள், மகனுடன் தீக்குளிக்க முயன்றார். மனைவியின் சகோதரனுக்காக ரூ.15 லட்சம் வட்டிக்கு திருநெல்வேலி தச்சநல்லூரை சேர்ந்தவரிடம் வாங்கி கொடுத்துள்ளார். அவர் மேலும் பல ஆயிரம் ரூபாய் பணம் கேட்டதால் மனம் உடைந்து தீக்குளிக்க முயன்றதாக கூறியுள்ளார்.

குடும்பத்தோடு தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி- ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு!

இதையும் படிங்க:அமேசான் குடோனில் கொள்ளை... சுவற்றில் துளையிட்டு துணிகரம்..

ABOUT THE AUTHOR

...view details