தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கும், தூத்துக்குடி மாவட்டத்திற்கும் கல்வி, சுகாதாரம், குடிநீர், உயர்தர மருத்துவம், விவசாயம், விளையாட்டு, போக்குவரத்து, ஆன்மிகம், இளைஞர் நல மேம்பாடு, சாலை வசதி, மகளிர் சுய உதவிக்குழு, வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளிலும் மக்களின் அடிப்படை தேவைகளை கண்டறிந்து அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறும் வகையில் அனைத்து அரசு நலத்திட்டங்களையும் பெற்று தந்த சாதனையாளர் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூக்கு கோவில்பட்டியில் பாராட்டு விழா நடைபெற்றது.
நாடார் மேல்நிலைப் பள்ளியில் அனைத்து சமுதாய மக்கள் ஒன்றிணைந்து நடத்திய பாராட்டு விழாவுக்கு கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கம், தொழில் வர்த்தக சங்க தலைவர் பழனிச்செல்வம் தலைமை வகித்தார். கோவில்பட்டி பசும்பொன் அறக்கட்டளை நிறுவனர் பரமசிவம் முன்னிலை வகித்தார்.