தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்காளர் பட்டியலில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடி: விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

voter list applications
voter list applications

By

Published : Nov 29, 2020, 5:06 PM IST

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள் தொடர்பான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள் தொடர்பாக பெறப்பட்டுள்ள விண்ணப்பங்கள் குறித்தும், அலுவலகத்தில் பராமரிக்கப்படும் கோப்புகளையும் ஆய்வு செய்தார்.

மேலும், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது முடிவுற்ற நடவடிக்கைகள் குறித்தும், முடிவுறா நடவடிக்கைகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பராமரிக்கப்படும் கோப்புகளையும் ஆட்சியர் ஆய்வு செய்தார். பின்னர் ஆட்சியர் செந்தில் ராஜ், தெரிவித்ததாவது, "தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல், ஒரே சட்டப்பேரவை தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்தல் ஆகியவற்றிற்காக 39 ஆயிரத்து 439 விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டுள்ளன.

விளாத்திகுளம் வட்டத்தில் 5 ஆயிரத்து 143 விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் சிறப்பு முகாம் டிசம்பர் மாதம் 12.12.2020 (சனிக்கிழமை) மற்றும் 13.12.2020 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெறவுள்ளது. இதற்கென நியமிக்கப்பட்டுள்ள நியமன அலுவலரிடமிருந்து படிவங்களை பெற்று, நிரப்பப்பட்ட படிவங்களை மேற்படி அலுவலரிடம் அளிக்கப்பட வேண்டும்.

மேலும், பொதுமக்கள் கைபேசி, கணினியில் இணையதளம் மூலமாகவும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பம் அளிக்கலாம்" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details