சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்கத்தின் 250ஆவது பிறந்தநாளையொட்டி, ஓட்டப்பிடாரம் கவா்னகிரியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சுந்தரலிங்கனார் பிறந்தநாள் விழா: வெறிச்சோடிய மணிமண்டபம் - collector pays homage to freedom fighter sundaralinganar
தூத்துக்குடி: சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்கனாரின் பிறந்தநாள் விழாவையொட்டி அவரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு ஆட்சியர் சந்தீப் நந்தூரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

collector pays homage to freedom fighter sundaralinganar
சுந்தரலிங்கனார் பிறந்தநாள் விழா
பொதுமக்கள் அதிகமாக கூடாதவாறு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது. எனவே, கவா்னகிரியில் உள்ள வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை. பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாததால் மணிமண்டபம் வெறிச்சோடி காணப்பட்டது.
இதையும் படிங்க...ஒரு கோடி ரூபாயில் இரட்டைமலை சீனிவாசனுக்கு நினைவு மண்டபம்!