தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘காய்ச்சல் நோயாளிகள் குறித்து விவரம் தெரிவிக்க வாட்ஸ்அப் எண்’ - ஆட்சியர் அறிவிப்பு - ஆட்சியர் சந்திப் நந்தூரி

தூத்துக்குடி: காய்ச்சல் உள்ளிட்ட கரோனா அறிகுறிகளுடன் வரும் நோயாளிகள் குறித்து விவரங்களை உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு வர ஏதுவாக பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

சந்தீப்
சந்தீப்

By

Published : Jun 30, 2020, 5:15 AM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநில அரசின் வழிகாட்டுதல்களின் படி, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறாமால் இருப்பதற்கான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகள், மருத்துவ சிகிச்சையகங்களுக்கு காய்ச்சல், மூச்சுத்திணறல், சளி, இருமல் போன்ற அறிகுறிகளுடன் வரும் நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்க அதிக வாய்ப்பு உள்ளதால், நோயாளிகளின் விவரங்களை உடனடியாக, ‘9385251239’ என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கோ அல்லது dailyupdateformatclinics@gmail.com என்கிற இ-மெயில் முகவரிக்கோ அனுப்பி வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இந்த விவரங்களை முறையாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்காத தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவ சிகிச்சையக நிர்வாகிகள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் தொற்றுநோய் பரவல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details