தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நவம்பர் 2ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - தூத்துக்குடி ஆட்சியர் - உள்ளூர் விடுமுறை

தூத்துக்குடி: திருச்செந்தூர் கந்தர் சஷ்டி திருவிழா-சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு நவம்பர் 2ஆம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

thoothukudi

By

Published : Oct 24, 2019, 9:05 PM IST

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 'தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி ஆலயம் கந்தர் சஷ்டி திருவிழா-சூரசம்ஹார நிகழ்ச்சி 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2ஆம் தேதி நடைபெறுகிறது. இவ்விழாவை முன்னிட்டு 02.11.2019 தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

கந்தர் சஷ்டி திருவிழா-சூரசம்ஹார நிகழ்ச்சிக்கான உள்ளுர் விடுமுறைக்குப் பதிலாக 14.12.2019 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:திருச்செந்தூர்: 1 கோடியை தாண்டிய உண்டியல் காணிக்கை

ABOUT THE AUTHOR

...view details