கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் முதல்நிலை பணியாளர்களாக செயல்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், துப்புரவுப் பணியாளர்களை பாராட்டும் வகையில், விமானப் படையின் ஹெலிகாப்டர்களைக் கொண்டு நாடு முழுவதுமுள்ள மருத்துவமனைகள் மீது மலர்கள் தூவி முப்படை மரியாதை செய்யப்பட்டது.
அந்தவகையில் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களின் சேவையைப் பாராட்டும் விதமாக, கடற்படை ராணுவத்தினர் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி தூத்துக்குடி வ. உ. சிதம்பரனார் துறைமுகத்தில் நேற்று நடைபெற்றது.
தூத்துக்குடியில் உள்ள இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான சி. ஜி. அபிராஜ், சி. ஜி. ஆதேஷ் ஆகிய இரண்டு அதிநவீன ரோந்துக் கப்பல்கள், வ. உ. சிதம்பரனார் துறைமுகம் அருகே நடுக்கடலில் நங்கூரமிடப்பட்டுள்ளன.