திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரில் முன்னாள் சபாநாயகர் பி.ஹெச். பாண்டியனுக்கு கட்டப்பட்டுள்ள மணிமண்டபம் திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் ஒரே வாகனத்தில் திருநெல்வேலி நோக்கி பயணித்தனர்.
முதலமைச்சர் பாதுகாப்பு வாகனம் சரியாக வல்லநாடு பஜார் பகுதியை கடந்து 50 மீட்டர் தூரத்திற்கு சென்ற நிலையில் பாதுகாப்பு வாகனத்தை தொடர்ந்து வந்து கொண்டிருந்த அதிமுக கட்சியினர் வாகனத்தின் குறுக்கே பசுவும், கன்றுக்குட்டி குறுக்கிட்டுள்ளன.
முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனம் அடுத்தடுத்து விபத்து கன்றுக்குட்டியின் மீது மோதாமல் இருப்பதற்காக காரில் சென்ற கட்சியினர் திடீரென பிரேக் பிடித்ததில் அதன் பின்னே வந்த கார், முன்னிருந்த கார் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கட்சியினர் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. உடனடியாக அவர்கள் அனைவரும் விபத்துக்குள்ளான வாகனங்களை சாலையின் ஓரம் நிறுத்திவிட்டு அதை பின்தொடர்ந்து வந்த மற்ற வாகனங்களில் ஏறி திருநெல்வேலி புறப்பட்டு சென்றனர்.
இதையும் படிங்க:திமுக பல கூறுகளாக உடையும் - அமைச்சர் க. பாண்டியராஜன்