தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாங்குநேரி பரப்புரை - தூத்துக்குடிக்குச் சென்ற முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு! - தூத்துக்குடியில் முதலமைச்சர்

நாங்குநேரி இடைத்தேர்தல் பரப்புரைக்காக தூத்துக்குடி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்

edappadi palaniswamy

By

Published : Oct 13, 2019, 3:57 PM IST

நாங்குநேரி இடைத்தேர்தலில் பரப்புரை மேற்கொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி விமான நிலையம் சென்றடைந்தார். அங்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தூத்துக்குடி மாவட்ட அதிமுக கழகம் சார்பில் செண்டை மேளம் முழங்க பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி வந்த முதலமைச்சருக்கு அமைச்சர்கள் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணியன், கே.டி.ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர், ராஜலட்சுமி, காமராஜ், கடம்பூர் ராஜு மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பளித்தனர்.

தூத்துக்குடி வந்த முதலமைச்சர்

இதனைத் தொடர்ந்து இன்று மாலை நான்கரை மணிக்கு மேல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாங்குநேரி சென்று தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.

இதையும் படிங்க: பரிதி இளம்வழுதி முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி; திருமாவளவன் பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details