தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நீதித்துறை ஊழியர்களுக்கு கடந்த 24ஆம் தேதி கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று (ஜூலை 27) இரவு வெளியானது. இதில், கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் எண் ஒன்றில், இரண்டு ஊழியர்களுக்கும், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் இரண்டில் இருவர், விரைவு நீதமன்றத்தில் ஒருவர் என மொத்தம் ஐந்து நீதித்துறை ஊழியர்களுக்கு கரோனா இருப்பது உறுதியானது.
ஊழியர்களுக்கு கரோனா: கோவில்பட்டி நீதிமன்றம் மூடல் - நீதிமன்ற ஊழியர்களுக்கு கரோனா
தூத்துக்குடி: கோவில்பட்டி நீதிமன்றங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஐந்து பேருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, அனைத்து நீதிமன்றமும் மூடப்பட்டது.
corona
இதனையடுத்து, நீதிமன்ற அலுவலகம் மற்றும் வளாகம் முழுவதும் நகராட்சி ஊழியர்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும், நீதித்துறை பணிகள் அனைத்தும் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு, நீதிமன்றம் அனைத்தும் மூடப்பட்டது.
இதையும் படிங்க:'ஆகஸ்ட் 5 முதல் ரேஷன் கடைகளில் மாஸ்க் வழங்கப்படும்' - அமைச்சர் காமராஜ்