தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் தூள் பறக்கும் கிறிஸ்துமஸ் வியாபாரம் - மக்கள் ஆர்வம் - thoothukudi

தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி குடில் அமைப்பதற்கான பொருட்கள், ஸ்டார் போன்ற பொருட்களின் விற்பனை அமோகமாக நடந்துவருகிறது.

தூத்துக்குடியில் தூள் பறக்கும் கிறிஸ்துமஸ் வியாபரம் - மக்கள் ஆர்வம்
Etv Bharatதூத்துக்குடியில் தூள் பறக்கும் கிறிஸ்துமஸ் வியாபரம் - மக்கள் ஆர்வம்

By

Published : Dec 8, 2022, 12:54 PM IST

தூத்துக்குடி:இயேசு கிறிஸ்து பிறந்த தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில், ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஸ்டார் கட்டி தொங்க விடப்படுவது வழக்கம். ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி தூத்துக்குடியில் உள்ள கடைவீதிகளில் பல வண்ணங்களில், பல்வேறு வகைகளில் தயாரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் ஸ்டார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஸ்டார்களை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள். இதனால் தூத்துக்குடி கடைவீதியில் கிறிஸ்துமஸ் ஸ்டார் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. கிறிஸ்துமஸ் மரங்கள், ஸ்டார்கள் ரூ.60 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்கள் அலங்கரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதையும் மக்கள் வாங்கி சென்று தங்கள் வீடுகளில் வைத்து உள்ளனர்.

இது குறித்து கடை உரிமையாளர் தனசேகரன் கூறுகையில்,”3 வருடம் கரோனா முடிந்து இந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகை வர உள்ளது. இதற்காக கொரோனா ஸ்டார், சின்ன வால் ஸ்டார், பல்சர் ஸ்டார், ரூட்ராஸ் ஸ்டார், டிவைம் ஸ்டார், ஜம்போ ஸ்டார், fire ball ஸ்டார், XL, LL, 7 ஸ்டார் பெரியது, சிறியது என பலவவையான ஸ்டார்கள் விற்பனைக்கு உள்ளது. இதை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

மேலும் குடில் செட் வகைகள், கிறிஸ்துமஸ் தாத்தா பலூன் 10 ரூபாய் 400 வரை விற்பனை நடைபெறுகிறது. கிறிஸ்துமஸ் கேப் வகைகள் 200 முதல் 1,500 வரை, கிறிஸ்துமஸ் தாத்தா உடைகள், கிறிஸ்துமஸ் ட்ரீ, போன்ற பொருட்கள் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. கடந்த வருடங்களில் 10 ந் தேதிக்கு மேல் விற்பனை நடைபெறும் பட்சத்தில், இந்த வருடம் 1ம் தேதியே விற்பனை ஜோராக நடைபெறுகிறது” எனக் கூறினார்.

தூத்துக்குடியில் தூள் பறக்கும் கிறிஸ்துமஸ் பொருட்கள் வியாபாரம்

இதையும் படிங்க:Video: தென்காசி அரசு விழாவிற்காக ரயிலில் செல்லும் முதலமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details