தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலுக்காக தொகுதிக்குட்பட்ட ஏர்வாடி, மூலைக்கரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து 13ஆம் தேதி பரப்புரை மேற்கொண்டார்.
2ஆம் கட்ட பரப்புரைக்காக தூத்துக்குடிக்கு பயணமாகும் எடப்பாடி! - Tuthookudi come tn chief minister
தூத்துக்குடி: நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் இரண்டாம் கட்ட பரப்புரைக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 18ஆம் தேதி தூத்துக்குடிக்கு வர இருக்கிறார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
இந்நிலையில், தனது முதற்கட்ட பரப்புரை பயணத்தை நேற்று முன்தினம் இரவு நிறைவு செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலை தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னை புறப்பட்டார். தொடர்ந்து அவர் தனது இரண்டாம் கட்ட பரப்புரைக்காக வருகிற 18ஆம் தேதி மீண்டும் தூத்துக்குடிக்கு வரவுள்ளார்.
இதையும் படிங்க: மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்