தூத்துக்குடி:இந்தியாவில் கசகசா விதைகள் தடை செய்யப்படவில்லை என்றாலும், அவற்றைக் கையாளுவதில் பல கட்டுப்பாடுகளும், விதிகளும் உள்ளன. இவற்றை போதைப் பொருளாக பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதால், இவற்றை இறக்குமதி செய்ய மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் ஆணையரிடம் தடையில்லா சான்று மற்றும் உரிமம் பெற வேண்டும்.
இந்நிலையில், கடந்த வாரம் மலேசியாவில் இருந்து தூத்துக்குடி புதிய துறைமுகத்திற்கு வந்த கப்பலில் கண்டெய்னர் பெட்டியில் தவிடு என்ற பெயரில் கசகசாவை மறைத்து எடுத்து கடத்தப்படுவதாக தூத்துக்குடியில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அந்த ரகசிய தகவலின் அடிப்படையில், துறைமுக சாலையில் உள்ள தனியார் கண்டெய்னர் முனையத்தில் அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.