பல தனியார் ஏற்றுமதி நிறுவனங்கள் சரக்குகளை ஏற்றுமதி செய்யாமல், ஜிஎஸ்டியை மட்டும் செலுத்தி மத்திய அரசின் ஊக்கத் தொகையை சட்டத்திற்குப் புறம்பாக பெருமளவில் பெற்று வருவதாக, மத்திய சுங்கத் துறையைச் சேர்ந்த மத்திய ஜிஎஸ்டி வரித் துறையினருக்குப் பல புகார்கள் வந்த வண்ணம் இருந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, திருநெல்வேலியைச் சேர்ந்த மத்திய சரக்கு சேவை வரித்துறை துணை ஆணையர் சுஜித் மேனன் தலைமையில் 10 பேர் கொண்ட அலுவலர்கள் குழு, தூத்துக்குடியில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் இன்று திடீர் சோதனையை மேற்கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தை அடுத்துள்ள போல்டன்புரத்தில், இயங்கிவரும் தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் மத்திய சுங்கத்துறை, கலால் துறை அலுவலர்கள் மேற்கொண்ட சோதனையில் முறைகேடாக ஊக்கத் தொகையைப் பெற்று வந்தது தொடர்பாக முக்கிய ஆவணங்களை அலுவலர்கள் கைப்பற்றி உள்ளனர்.