தூத்துக்குடி சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் ஜெயராஜ் (56), பென்னிக்ஸ் (31) ஆகியோர் சாத்தான்குளம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, விசாரணைக் கைதிகளாக கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து சந்தேகத்திற்கிடமான முறையில் தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கும் - மத்திய அரசு அறிவிப்பு - சாத்தான்குளம் லாக்கப் கொலை
13:16 July 07
தூத்துக்குடி: ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
சாத்தான்குளம் காவல் துறையினர் விடிய, விடிய அவர்களை அடித்து துன்புறுத்தியதே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது. இந்தக் கொடூரச் சம்பவத்திற்கு, நாடு முழுவதிலுமிருந்து கண்டனக் குரல்கள் எழுந்தன. இந்த வழக்கை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர். ஆனால், இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும் என பல தரப்பிலும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
'சாத்தான்குளம் இன்ஸ்பெக்டருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' - அமைச்சர் கடம்பூர் ராஜு
இந்நிலையில், ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கை மத்திய புலனாய்வுத் துறை மூலம் விசாரிக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்குக் கடிதம் ஒன்றையும் அவர் எழுதியிருந்தார். அதனை ஏற்று சிபிசிஐடி வசமுள்ள ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்று மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.