தூத்துக்குடி:கோவில்பட்டியில் பாரதிய ஜனதா கட்சியின் மாற்றத்துக்கான மாநாடு நேற்றிரவு நடைபெற்றது. வடக்கு மாவட்ட பாஜக தலைவர் வெங்கடேசன் சென்ன கேசவன் தலைமையில், நடைபெற்ற மாநாட்டில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா, மாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் பேசிய அவர், "தமிழகத்தில் பால் விலை, மின் கட்டணம், சொத்து வரி உயர்வு காரணங்களால் மகளிருக்கு மாதம் ரூ.3,500 கூடுதலாகச் செலவாகிறது. டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் எனப் பெண்கள் கேட்கின்றனர்.
எதிர்க்கட்சியாக இருந்தபோது, டாஸ்மாக்கை மூட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கொடி பிடித்து போராட்டம் நடத்தினர். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தபின்னர் தான் டாஸ்மாக் வருவாய் அதிகரித்துள்ளது என்றார். தமிழகத்தில் திமுக அமைச்சர்கள் மேடையில் பேசுவதைப் பார்க்கும் போது சமூக நீதி எங்கே இருக்கிறது.