தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாத்தான்குளம் வழக்கில் விசாரணை மேற்கொள்ளும் சிபிஐ அலுவலருக்கு கரோனா! - சாத்தான்குளத்தில் தந்தை மகன் சித்ரவதை

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு குறித்து விசாரணை நடத்தி வந்த சிபிஐ அலுவலர்களில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

CBI officer investigating sathankulam case affected with covid-19
சாத்தான்குளம் வழக்கில் விசாரணை மேற்கொள்ளும் சிபிஐ அதிகாரிக்கு கரோனா

By

Published : Jul 23, 2020, 10:07 AM IST

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த காவலர்கள் சாமதுரை, செல்லதுரை, வெயில்முத்து ஆகியோரை மூன்று நாள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க மதுரை நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

இதைத்தொடர்ந்து இந்த காவலர்கள் மூன்று பேரும் சாத்தான்குளத்துக்கு அழைத்துவரப்பட்டு, அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதையடுத்து விசாரணை நடத்தி வந்த சிபிஐ அலுவலர்களில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட மூன்று காவலர்களும் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, இந்த விசாரணையின்போது உடனிருந்த காவலர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சாமத்துரை, செல்லத்துரை, வெயிலுமுத்து ஆகிய மூன்று காவலர்களுக்கும் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'சாத்தான்குளம் காவலர்கள் மீது புகார்கள் வந்துள்ளன; உறுதியானால் நடவடிக்கை பாயும்'

ABOUT THE AUTHOR

...view details