தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கார் மீது முறிந்து விழுந்த மரம்! - தூத்துகுடியில் கனமழை

தூத்துக்குடி: கனமழை காரணமாக மரம் முறிந்து விழுந்ததில் கார் கண்ணாடி சேதம் அடைந்துள்ளது.

tree
tree

By

Published : Dec 8, 2020, 3:23 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாநகர் பகுதியில், இன்று காலை முதல் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்தது.

இதனால் நகரின் பிரதான சாலைகள், பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பாக மழை நீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

மரம் விழுந்து கார் கண்ணாடி சேதம்

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கழிவு நீரோடை அமைப்பது சாலைகள் கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனி, போல்பேட்டை குடியிருப்பு பகுதியில் மழை நீர் குடியிருப்புகளை சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

மேலும் இப்பகுதியில் உள்ள 60 அடி சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைந்தது.

ABOUT THE AUTHOR

...view details