தூத்துக்குடி:விருதுநகர் மாவட்டம், பெத்து ரெட்டிபட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர், தூத்துக்குடி மாவட்டம் முள்ளிச்செவல் பகுதியில் நடைபெறும் தனது மகளின் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் காரில் சென்றுள்ளார்.
சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு... வளைகாப்பு நிகழ்ச்சிக்குச்சென்றபோது நேர்ந்த சோகம்... - வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றபோது விபத்து
ஒட்டப்பிடாரம் அருகே டயர் வெடித்து கார் விபத்துக்குள்ளானதில், 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். வளைகாப்பு நிகழ்ச்சிக்குச்சென்றபோது இந்தச்சம்பவம் நடந்துள்ளது.
கார் ஒட்டப்பிடாரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென டயர் வெடித்து கார் விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு பெண்மணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச்சென்ற ஒட்டப்பிடாரம் போலீசார், இறந்தவரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த 8 பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் காரை ஓட்டிச் சென்ற சங்கர் உயிருக்கு ஆபத்தான நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதையும் படிங்க: கதவைத் திறந்து வைத்து தூங்கிய மாணவர்கள்... எட்டு செல்போன்கள், ஒரு லேப்டாப் திருட்டு