தூத்துக்குடி:கோயம்புத்தூரில் இருந்து கோவில்பட்டி நோக்கி செல்லும் அரசு பேருந்தில் கஞ்சா கடத்தப்படுவதாக தூத்துக்குடி மேற்கு காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
அந்தத் தகவலின் அடிப்படையில் கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் காவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கோயம்புத்தூரிலிருந்து வந்த பேருந்தில் இருந்து இளைஞர் ஒருவர் சந்தேகிக்கும் வகையில் இருப்பதை கண்டு, அவரிடம் காவல் துறையினர் சோதனையிட்டன். இந்த சோதனையில் அவரிடமிருந்து 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
முதல்கட்ட தகவலில், அவர் நாலாட்டின்புதூரைச் சேர்ந்த இசக்கிமுத்து(23) என்பதும், கோயம்புத்தூரில் இருந்து கஞ்சா வாங்கிவந்து தூத்துக்குடியில் விற்பனை செய்துவந்ததும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: கஞ்சா போதையில் 5 இளைஞர்கள் வெறிச்செயல் - மூவருக்கு கத்தி குத்து