தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தெக்குச்சீமையில என்னைப் பத்தி கேளு' - தூத்துக்குடியில் ரெடியாகும் 300 கிலோ கிராம் கிறிஸ்துமஸ் கேக்..! - தூத்துக்குடியில் கேக் மிக்சிங் விழா

தூத்துக்குடி: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 300 கிலோ கிராம் எடை கொண்ட கிறிஸ்துமஸ் கேக் மிக்சிங் விழா, தனியார் உணவு விடுதியில் கோலாகலமாக நடைபெற்றது.

கேக் மிக்சிங் விழா

By

Published : Nov 21, 2019, 3:17 PM IST

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு விதவிதமாக கேக் தயாரிக்கும் பணிகள் தொடங்கி விட்டன. ஆங்கிலேயர்கள் பழக்கத்தைப் பின்பற்றும் வகையில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு மாதம் முன்னரே, கேக் தயாரிக்கும் பணிகள் பல்வேறு நாடுகளில் தொடங்கப்படும்.

அதைப் போல், தூத்துக்குடியில் தனியார் ஹோட்டலில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 300 கிலோ கிராம் எடை கொண்ட கேக் மிக்சிங் விழா நடைபெற்றது. இந்த விழாவைத் தொழிலதிபர் துரைராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மேலும், ஜோ பிரகாஷ், கிப்சன், திவ்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கேக் மிக்சிங் விழா

இதுகுறித்து பொதுமேலாளர் சுப்பிரமணியன் கூறுகையில், "இந்த கேக் மிக்சிங் என்பது 17ஆவது நூற்றாண்டில் ஐரோப்பாவில் தொடங்கப்பட்டது. கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பதற்கு உலர்ந்த முந்திரிப் பழங்கள், பாதாம் பருப்புகள், செர்ரி பழங்கள், பலதரப்பட்ட ஜாம் வகைகளுடன் உயர் தர மதுபானங்களையும் சேர்க்க வேண்டும். இந்த உலர்ந்த பழங்களிலும், மதுபானங்களிலும் உள்ள இனிப்பு தன்மையானது கிறிஸ்துமஸ் கேக் கெடாமல் பாதுகாக்கிறது.

இந்த கலவை நன்கு ஊறுவதற்கு ஏதுவாக மிகப்பெரிய காற்றுப் புகாத கொள்கலனில் வைத்து மூடப்படுகிறது. பழக்கலவையானது நன்றாக ஊறுவதற்கு ஏதுவாக வாரம் ஒருமுறை திறக்கப்பட்டு, நன்றாகக் கலக்கப்பட்டு கேக் தயாரிக்கப்படுகிறது. இந்த கலவை டிசம்பர் 20ஆம் தேதி இறுதியாக திறந்து, கேக் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கிறிஸ்துமஸ் தாத்தா உருவத்தில் 1000 கிலோ கேக் - கண்கவரும் காணொலி!

ABOUT THE AUTHOR

...view details