தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் பிடெக் நாட்டிக்கல் சயின்ஸ் பட்டப்படிப்பு தொடக்கம் - Duttur fishermen training in Tamil Nadu

தூத்துக்குடி: தமிழ்நாட்டில் முதல்முறையாக பிடெக் நாட்டிக்கல் சயின்ஸ் பட்டப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளக் கல்லூரி துணை பதிவாளர் சுகபெலிக்ஸ் தெரிவித்துள்ளார்.

டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளக் கல்லூரி துணை பதிவாளர் சுகபெலிக்ஸ் பேட்டி

By

Published : Nov 22, 2019, 4:13 AM IST

தூத்துக்குடியில் உலக மீன்வள தினத்தையொட்டி மீன்வளக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் மீனவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கல்லூரியின் முதல்வர் நீதி செல்வன் தலைமை தாங்கி வரவேற்புரையாற்றினார்.

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளக் கல்லூரி துணை பதிவாளர் சுகபெலிக்ஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'மீன்வள பல்கலைக்கழகத்திலிருந்து மீனவ மக்களுக்காக பல்வேறு படிப்புகள், பட்டயப்படிப்புகள் கற்றுத் தரப்படுகிறது. இருப்பினும், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீன்வளக்கல்லூரியில் பிடெக் நாட்டிகல் சயின்ஸ் பட்டப்படிப்பு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது' என்றார்.

டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளக் கல்லூரி துணை பதிவாளர் சுகபெலிக்ஸ் பேட்டி

தொடர்ந்து, 'இந்தப் பட்டப்படிப்பின் முக்கியத்துவத்தும் என்னவெனில், ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் படகுகளை அதிகமாக பயன்படுத்துவதை சொல்லித் தருகிறோம். அடுத்த மூன்று வருடங்களில் 500 முதல் 600 மீன்பிடி படகுகள் தமிழ்நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது' எனக் கூறினார். மேலும், 'ஆழ்கடல் மீன்பிடிப்பில் சிறந்தவராக கருதப்படும் தூத்தூர் மீனவர்களை கொண்டு தமிழ்நாட்டில் உள்ள மற்ற மீனவர்களுக்கும் பயிற்சி அளிப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது' எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மீன்வளத்துறை இணை இயக்குனர் சந்திரா, துணை இயக்குனர்கள் பிரின்ஸி வயலா, பாலசரஸ்வதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: நாட்டு படகு மீனவர்களுக்கு வாக்கி டாக்கி

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details