தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய பகுதிகளில் தொல்லியல் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி தொடங்கி கடந்த ஆறு மாதங்களாக இந்த அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், பரம்பு பகுதியில் 40 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
தொடர்ந்து வாழ்விடப் பகுதிகளை கண்டறிவதற்காக பொட்டல் கோட்டை திரடு, ஆவாரங்காடு திரடு, பராக்கிரமபாண்டி திரடு உள்பட ஐந்து இடங்களில் ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பராக்கிரமபாண்டி திரடு பகுதியில் ஏராளமான பழங்காலப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து பொட்டல் கோட்டை திரடு பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியில் மூன்று குழிகள் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தக் குழியில் மேல் மட்டத்தில் 300 ஆண்டுகள் பழமையான செங்கற்கள் காணப்படுகின்றன.